/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பிரிட்டன் நிதியில் கருவேல மரக்கட்டை கரியில் 'பயோசார்' தயாரிக்க ஆராய்ச்சி
/
பிரிட்டன் நிதியில் கருவேல மரக்கட்டை கரியில் 'பயோசார்' தயாரிக்க ஆராய்ச்சி
பிரிட்டன் நிதியில் கருவேல மரக்கட்டை கரியில் 'பயோசார்' தயாரிக்க ஆராய்ச்சி
பிரிட்டன் நிதியில் கருவேல மரக்கட்டை கரியில் 'பயோசார்' தயாரிக்க ஆராய்ச்சி
ADDED : பிப் 15, 2025 02:20 AM

ராமநாதபுரம்:பிரிட்டன் நிறுவனத்தின் உதவியுடன் ராமநாதபுரம் மாவட்டத்தில் சீமைக்கருவேல மரக்கட்டை கரியில் இருந்து பயோசார் (கரிமத்துகள்கள்) தயாரித்து, அவற்றை விவசாய நிலங்களில் உரமாக பயன்படுத்தும் ஆராய்ச்சி நடக்கிறது.
ராமநாதபுரம் மாவட்டத்தில்பெரும்பாலான தரிசு நிலங்கள், கண்மாய் கரைகள், ஊருணிகளில் சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்துள்ளன. இம்மரங்களை வெட்டி கரி மூட்டத் தொழிலில் பலர் கரி உற்பத்தியில் ஈடுபட்டுள்ளனர்.
ராமநாதபுரம், கடலாடி, முதுகுளத்துார், கமுதி, சாயல்குடி, பரமக்குடி, ஆர்.எஸ்.மங்கலம் ஆகிய இடங்களில் அதிகளவில் கரிமூட்டத் தொழில் நடக்கிறது.
இந்நிலையில் ராமநாதபுரத்தில் சீமைக்கருவேல மரக்கட்டை கரியில் பயோசார் தயார் செய்து விவசாய நிலங்களில் உரமாக பயன்படுத்தப்பட உள்ளது. இதற்கான ஆராய்ச்சியில் தமிழ்நாடு வேளாண் பல்கலை, தேனி மாவட்டம் பெரியகுளம் தோட்டக்கலைக் கல்லுாரி, ஆராய்ச்சி நிலையத்தின் இயற்கை வளம் மேலாண்மைத் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
புதுச்சேரியில் உள்ள 'சானிடேஷன் பர்ஸ்ட் இந்தியா' என்ற அமைப்பு மூலம் பிரிட்டன் நிதி பெற்று ராமநாதபுரம் மாவட்டம் பொந்தம்புளியில் இந்த ஆராய்ச்சி நடக்கிறது.ஆராய்ச்சியை பிரிட்டன் பிரதிநிதிகள், சானிடேஷன் பர்ஸ்ட் இந்தியா அமைப்பினர் பார்வையிட்டனர்.
திட்ட ஒருங்கிணைப்பாளர் உதவிப்பேராசிரியர் செண்பகவள்ளி, இணைப்பேராசிரியர் பிரபு ஆகியோர் பயோ சார் உற்பத்தி குறித்து விரிவாக எடுத்துத்துரைத்தனர்.
முதற்கட்டமாக கமுதி அருகே பொந்தம்புளி கிராமத்தில் குண்டு மிளகாய் செடிகளில் பயோ சார் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இதன் முடிவை பொருத்து இத்திட்டத்தை விரிவாக செயல்படுத்தப்பட உள்ளது என வேளாண் துறை அதிகாரிகள் கூறினர்.

