/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமநாதபுரத்தில் 'குடை மாடல் பஸ்'
/
ராமநாதபுரத்தில் 'குடை மாடல் பஸ்'
ADDED : மே 18, 2024 01:34 AM

ராமநாதபுரம்:வெளியே பெய்யும் மழையை பஸ்சின் உள்ளே அனுபவிக்க 'குடை மாடல் பஸ்' இயக்கப்படுகிறது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் கும்பகோணம் கோட்டம் அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் 51 புறநகர் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதில் 8 பஸ்கள் மட்டும் புதிய பஸ்கள். பெரும்பாலான பஸ்கள் 15 ஆண்டுகளை கடந்தும் இயக்கப்பட்டு வருகிறது.
நகர் கிளையில் 67 டவுன் பஸ்கள் உள்ளன. இவற்றில் பல 15 ஆண்டுகளை கடந்தவை. 20 புதிய பஸ்கள்வழங்கப்பட்டுள்ளன. மற்ற பஸ்கள் அனைத்தும் ஓட்டை, உடைசலாக இயக்கப்படுகின்றன.
ராமநாதபுரம் நகர் கிளையில் இருந்து வழித்தடம் 4 ல் அரண்மனையிலிருந்து பெரியபட்டினம் வரை இயக்கப்படும் டவுன் பஸ் 'குடை மாடல்' பஸ்சாக இயக்கப்படுகிறது.
பஸ் முழுவதும் மழை நீர் ஒழுகுவதால்பயணிகள் குடைபிடித்தபடி பயணிக்கின்றனர். இது போன்று ராமநாதபுரத்தில் மட்டும் 20 க்கும் மேற்பட்ட'குடைமாடல்' பஸ்கள் இயக்கப்படுவதாக பயணிகள் வேதனை தெரிவித்தனர்.

