/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தெருவோர வியாபார கடைகளுக்கு குடை
/
தெருவோர வியாபார கடைகளுக்கு குடை
ADDED : ஜூன் 18, 2024 05:50 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் தெருவோர வியாபாரிகளுக்கு ரோட்டரி சங்கம் சார்பில் குடைகள் வழங்கும் விழா நடந்தது.
அரண்மனை பகுதியில் நடந்த விழாவில் ரோட்டரி சங்க முன்னாள் மாநில கவர்னர் டாக்டர் சின்னத்துரை அப்துல்லா தலைமை வகித்தார். ராமநாதபுரம் எம்.எல்.ஏ., காதர்பாட்ஷா பங்கேற்று 50க்கும் மேற்பட்ட தெருவோர வியாபாரிகளுக்கு குடைகள் வழங்கினார்.
ரோட்டரி தலைவர் அதிசயபாபு, செயலாளர் ரத்தினவேல், நகராட்சி தலைவர் கார்மேகம், ரோட்டரி பட்டயத் தலைவர் ரவிச்சந்திரராமவன்னி உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.