sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

'பன்னீர்செல்வங்களால்' பாதிப்பில்லை

/

'பன்னீர்செல்வங்களால்' பாதிப்பில்லை

'பன்னீர்செல்வங்களால்' பாதிப்பில்லை

'பன்னீர்செல்வங்களால்' பாதிப்பில்லை


ADDED : ஜூன் 05, 2024 03:05 AM

Google News

ADDED : ஜூன் 05, 2024 03:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்:ராமநாதபுரம் லோக்சபா தொகுதியில், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துவதற்காக போட்டியிட வைக்கப்பட்ட பல 'பன்னீர்செல்வங்களால்' எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

ராமநாதபுரம் தொகுதியில் முன்னாள் முதல்வர்ஓ.பன்னீர்செல்வம், பா.ஜ., ஆதரவோடு அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு என்ற பெயரில் சுயேச்சையாக பலாப்பழம் சின்னத்தில் போட்டியிட்டார்.

இவரை எதிர்த்து ஓட்டுகளில் பாதிப்பை ஏற்படுத்த, ஐந்து பன்னீர்செல்வங்கள் களம் இறக்கப்பட்டனர்.

உசிலம்பட்டி அருகே மேக்கிலார்பட்டி, திருமங்கலம் அருகே வாகைக்குளம், மதுரை சோலை அழகுபுரம், ராமநாதபுரம் அருகே வலாந்தரவை, கங்கை கொண்டான் பகுதிகளை சேர்ந்த ஐந்து பன்னீர் செல்வங்கள் போட்டியிட்டனர். இவர்கள் குறைந்த ஓட்டுகளே பெற்றனர்.

முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் 3 லட்சத்து 42,882 ஓட்டுகளை பெற்றிருந்தார். நவாஸ் கனி, 1 லட்சத்து 66,782 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

ஒச்சப்பன் மகன் பன்னீர்செல்வம் 2,981, ஒச்சாத்தேவர் மகன் பன்னீர்செல்வம் 572, ஒய்யாதேவர் மகன் பன்னீர்செல்வம் 1,929, ஒய்யாரம் மகன் பன்னீர்செல்வம் 1,376, மலையாண்டி மகன் பன்னீர்செல்வம் 2,402 ஓட்டுகளையும் பெற்றிருந்தனர்.

இவர்கள் மொத்தமாக 9,260 ஓட்டுகள் தான் பெற்றனர்.






      Dinamalar
      Follow us