அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நிபந்தனையற்ற ஓய்வூதியம் தேவை
அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நிபந்தனையற்ற ஓய்வூதியம் தேவை
ADDED : ஜூலை 23, 2026 05:22 PM
பி.எம்.எஸ்., கூட்டத்தில் வலியுறுத்தல்
பரமக்குடி: பரமக்குடி கேசவ பவனத்தில் பாரதிய மஸ்துார் சங்கத்தின் (பி.எம்.எஸ்.,) 72வது ஸ்தாபன தின கூட்டம் நடந்தது. கைத்தறி பிரிவு மாவட்ட தலைவர் வெங்கட்ராமன் தலைமை வகித்தார். சேகர், கோபி, பி.எம்.எஸ்., மாவட்ட தலைவர் மோகன்ராம், மாவட்ட செயலாளர் இளையராஜா, கைத்தறி பிரிவு செயலாளர் காசி விஸ்வநாதன், ஜெயக்குமார் முன்னிலை வகித்தனர்.
60 வயது பூர்த்தி அடைந்த அமைப்பு சாரா தொழிலாளர்கள் அனைவருக்கும் நிபந்தனையற்ற ஓய்வூதியம் ரூ.5000 தமிழக அரசு உயர்த்தி வழங்க வேண்டும். நல வாரியத்தில் விண்ணப்பித்த 45 நாட்களுக்குள் ஓய்வூதியம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் மற்றும் தனியாரிடம் நெசவு நெய்யும் உறுப்பினர்களுக்கு 30 சதவீதம் கூலி உயர்வு வழங்க வேண்டும். வைகை ஆறு சர்வீஸ் ரோட்டை சீரமைத்து மினி பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ராம்தாஸ் நன்றி கூறினார்.
