/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பள்ளி வளாகத்தில் சுத்தமில்லா கழிப்பறை அள்ளப்படாத குப்பையால் சுகாதாரக்கேடு

ADDED : ஜூலை 28, 2024 04:07 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம், : ராமநாதபுரம் வண்டிக்காரத் தெருவில் நகராட்சி அலுவலகம் எதிரே நகராட்சி நடுநிலைப்பள்ளி அமைந்துள்ளது. இவ்வளாகத்தில் குழந்தைகள் மையம் உள்ளது. இங்கு தினசரி அகற்றப்படாமல் காலி இடங்களில் குப்பை குவிந்துள்ளது.
மேலும் கழிப்பறையை சரிவர சுத்தம் செய்வது இல்லை என புகார் எழுந்துள்ளது. துர்நாற்றத்தால் மாணவர்களுக்கு நோய்த் தொற்று பரவ வாய்ப்பு உள்ளது.
எனவே பள்ளி வளாகத்தில் குவிந்துள்ள குப்பையை அகற்றவும், கழிப்பறை சுத்தம் செய்வதற்கும் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் வலியுறுத்தினர்.