ADDED : மே 04, 2024 05:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.எஸ்.மங்கலம்: மே தினத்தை முன்னிட்டு ஏ.ஐ.டி.யு.சி., தொழிற்சங்கம் சார்பில் ஆர்.எஸ்.மங்கலம் பேரூராட்சி அலுவலகம் முன்பு கொடியேற்றப்பட்டு தொழிலாளர்கள் சார்பில் இனிப்புகள் வழங்கப்பட்டன.
ஒன்றிய தலைவர் விஜயராகவன், மாவட்டச் செயலாளர் சண்முகராஜன் உட்பட ஏராளமான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து தொழிலாளர்களின் ஒற்றுமை குறித்தும், பணி பாதுகாப்பு குறித்தும் தொழிலாளர்கள் ஆலோசனையில் ஈடுபட்டனர்.