/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சின்னக்கீரமங்கலத்தில் எரியாத சிக்னல் விளக்கு
/
சின்னக்கீரமங்கலத்தில் எரியாத சிக்னல் விளக்கு
ADDED : மே 26, 2024 10:59 PM

திருவாடானை : சின்னக்கீரமங்கலத்தில் சிக்னல் விளக்குகள் எரியாததால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.
திருவாடானை அருகே சின்னக்கீரமங்கலம் நான்கு ரோடு சந்திக்கும் பகுதியாக உள்ளது.
திருச்சி-ராமேஸ்வரம், மதுரை-தொண்டி ஆகிய நகரங்களுக்கு செல்லும் தேசிய நெடுஞ்சாலையான இந்த நான்கு ரோடு சந்திக்கும் இடத்தில் விபத்தை தடுக்கும் வகையில் சிக்னல் விளக்குகள் அமைக்கபட்டது.
இதனால் வேகமாக செல்லும் வாகனங்கள் சிக்னல் விளக்குகள் எரிவதை பார்த்து வேகத்தை குறைத்துச் சென்றனர்.
சில நாட்களாக நான்கு புறங்களிலும் சிக்னல் விளக்குகள் எரியவில்லை. இதனால் இருள் மயமாக உள்ளது. இப்பகுதி மக்கள் கூறியதாவது:
சிக்னல்களில் தரமான ஒயர், பேட்டரி பயன்படுத்தவில்லை.
இதனால் அடிக்கடி எரியாமல் உள்ளது. இருளாக இருப்பதால் விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
ஆகவே சம்பந்தபட்ட அலுவலர்கள் சிக்னல் விளக்குகளை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

