/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பரமக்குடி அருகே பராமரிக்கப்படாத 4 வழிச்சாலை: அச்சத்தில் பயணிகள்
/
பரமக்குடி அருகே பராமரிக்கப்படாத 4 வழிச்சாலை: அச்சத்தில் பயணிகள்
பரமக்குடி அருகே பராமரிக்கப்படாத 4 வழிச்சாலை: அச்சத்தில் பயணிகள்
பரமக்குடி அருகே பராமரிக்கப்படாத 4 வழிச்சாலை: அச்சத்தில் பயணிகள்
ADDED : பிப் 24, 2025 04:25 AM

பரமக்குடி : பரமக்குடி, மதுரை நான்கு வழிச்சாலை பராமரிக்கப்படாமல் உள்ள நிலையில் இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள், பயணிகள் விபத்து அச்சத்துடன் பயணிக்கின்றனர்.
மதுரையில் இருந்து பரமக்குடி வரை 6 ஆண்டுகளுக்கு முன்பு நான்கு வழி சாலை அமைக்கப்பட்டது. அப்போது ரோட்டோரம் இருந்த வீடுகள், மரங்கள் என அகற்றப்பட்டது.
இந்நிலையில் நான்கு வழி சாலை அமைக்கும் பொழுது போக்குவரத்து எளிதாக இருக்கும் வகையில் நகருக்கு வெளியில் ரோடு கொண்டு செல்லப்பட்டது. இதனால் வாகனங்களில் பயணிப்பவர்களுக்கு வசதியாக வாகன நிறுத்துமிடம், கழிப்பறை மற்றும் தங்கும் வசதிகள் என ஆங்காங்கே ஏற்படுத்தப்பட்டது. இது போன்ற இடங்களில் மின்விளக்கு வசதிகள் செய்யப்பட்டதால் பயணிகள் அச்சமின்றி இரவு நேரங்களில் கடந்தனர். கடந்த சில மாதங்களாக பரமக்குடி அருகே உள்ள நான்கு வழிச்சாலையோர வாகன நிறுத்துமிடம் கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன. மேலும் கழிப்பறை பூட்டப்பட்டு பயன்படுத்த முடியாத சூழல் இருக்கிறது. மின் விளக்குகளும் எரியாமல் இருப்பதால் தொலை துாரத்தில் இருந்து வருபவர்கள் மதுரைக்கு அடுத்து பரமக்குடி வரை இரவு நேரங்களில் விபத்து அச்சத்துடன் பயணிக்க வேண்டிய நிலை உள்ளது.
ஆகவே நான்கு வழிச்சாலையில் வழக்கம் போல் அனைத்து வசதிகளையும் மேம்படுத்த, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

