/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
போதைப்பொருள் விற்பனையை ஒழிக்க த.மு.மு.க., எஸ்.பி.,யிடம் வலியுறுத்தல்

ADDED : ஜூலை 05, 2024 04:27 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் போதைப்பொருள் விற்பனையை ஒழிக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சந்தீஷ் எஸ்.பி., யிடம் த.மு.மு.க,வினர் வலியுறுத்தினர்.
த.மு.மு.க., மாநில துணை பொதுச் செயலாளர் சலிமுல்லாஹ்கான் தலைமையில் மாவட்டத்தலைவர் இப்ராஹிம், செயலாளர் அப்துல் ரஹீம், துணை செயலாளர் ஜாகிர்பாபு, சவுதி மண்டல முன்னாள் த.மு.மு.க., நிர்வாகி சீனி முகம்மது ஆகியோர் சந்தீஷ் எஸ்.பி., யை சந்தித்தனர்.
அப்போது மக்களின் வாழ்வை அழிக்கும் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் விற்பனையை முற்றிலும் ஒழிக்க வேண்டும். போதைப்பொருள் விற்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
போலி பத்திரங்கள் மூலம் நில மோசடி செய்பவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தும் கைது செய்யாமல் இருப்பதை சுட்டிக்காட்டி நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொண்டனர்.
த.மு.மு.க., மனித நேய சேவையை அறியும் வண்ணம் ராமநாதபுரம் மாவட்ட மனித நேய சேவைகளின் தொகுப்பு எஸ்.பி., யிடம் வழங்கப்பட்டது.