/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பள்ளிகளில் பாலியல் சீண்டல் அதிகரிப்பு விழிப்புணர்வை ஏற்படுத்த வலியுறுத்தல்
/
பள்ளிகளில் பாலியல் சீண்டல் அதிகரிப்பு விழிப்புணர்வை ஏற்படுத்த வலியுறுத்தல்
பள்ளிகளில் பாலியல் சீண்டல் அதிகரிப்பு விழிப்புணர்வை ஏற்படுத்த வலியுறுத்தல்
பள்ளிகளில் பாலியல் சீண்டல் அதிகரிப்பு விழிப்புணர்வை ஏற்படுத்த வலியுறுத்தல்
ADDED : பிப் 22, 2025 06:45 AM
திருவாடானை: பள்ளிக் கல்வி தகவல் மையம் மற்றும் சைல்டு லைன் குறித்த விழிப்புணர்வு இல்லாததால் பாலியல் சீண்டல் சார்ந்த சம்பவங்களில் பள்ளி மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தொண்டி அருகே அரசு மேல்நிலைப்பள்ளியில் நான்கு ஆண்டுகளாக தலைமை ஆசிரியர் மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுஉள்ளார். சில நாட்களுக்கு முன்பு போலீசார் அவர் மீது போக்சோ வழக்கு பதிந்து அவரை தேடி வருகின்றனர்.
திருவாடானை, தொண்டி சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
சமீப காலமாக பாலியல் சீண்டல்களில் ஆசிரியர்கள்ஈடுபடுவதாக குற்றச்சாட்டுகள் அதிகரித்து வருகிறது. சைல்டு லைன் எண்ணில் தொடர்பு கொண்டு மாணவியர், பெற்றோர் புகார் அளித்து வருகின்றனர். அதே சமயம் அரசின் பள்ளிக் கல்வி தகவல் மையம் குறித்த விழிப்புணர்வு மாணவர்களிடம் குறைவாகவே உள்ளது.
தனியார், அரசு உதவி பெறும் பள்ளிகளை காட்டிலும் அரசு பள்ளிகளில் பாலியல் சீண்டல் புகார்கள்அதிகரித்து வருகிறது. ஆகவே அதிகாரிகள் போதுமான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. மாணவிகளிடம் போதிய விழிப்புணர்வும் இல்லை.
எனவே பள்ளியில் அறிவிப்பு பலகை, பிளக்ஸ் போர்டு, துண்டு பிரசுரங்கள் வாயிலாக விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். பள்ளிகளில் அவ்வப்போது விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்படுகிறது. இக் கூட்டங்களை அதிகமாக நடத்தி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். தகவல் மையம் எண், சைல்டு எண் மற்றும் அரசால் அறிவிக்கபட்ட அலைபேசி எண்களை விளம்பரபடுத்த வேண்டும் என்றனர்.