/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கோயில் அருகே ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தல்
/
கோயில் அருகே ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தல்
ADDED : செப் 10, 2024 11:54 PM

ராமநாதபுரம் : உச்சிபுளி அருகே புதுமடம் மேற்கு தெரு மக்கள் கோயில் அருகே அரசு இடத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தி ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
அதில் கூறியிருப்பதாவது: புதுமடம் மேற்கு தெருவில் முத்துமாரியம்மன் கோயில், காமாட்சி அம்மன் கோயில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளன. முத்துமாரியம்மன் கோயிலில் புரட்டாசி மாதம் முளைப்பாரி திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் கோயில் அருகே அரசு புறம்போக்கு இடத்தை சிலர் ஆக்கிரமித்துள்ளனர். இதனால் பொதுமக்கள், பக்தர்கள் நடந்து செல்வதில் சிரமப்படுகின்றனர். எனவே ஆக்கிரமிப்பை அகற்ற கலெக்டர் உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தினர்.