/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
நயினார்கோவில் வாசுகி தீர்த்த குளத்தை சீரமைக்க வலியுறுத்தல்
/
நயினார்கோவில் வாசுகி தீர்த்த குளத்தை சீரமைக்க வலியுறுத்தல்
நயினார்கோவில் வாசுகி தீர்த்த குளத்தை சீரமைக்க வலியுறுத்தல்
நயினார்கோவில் வாசுகி தீர்த்த குளத்தை சீரமைக்க வலியுறுத்தல்
ADDED : ஆக 25, 2024 10:36 PM
நயினார்கோவில்: பரமக்குடி அருகே உள்ள நயினார்கோவில் நாகநாத சுவாமி கோயில் வாசுகி தீர்த்த குளத்தை சீரமைக்க கோரிக்கை எழுந்துள்ளது.
நயினார்கோவிலில் சவுந்தர்ய நாயகி சமேத நாகநாத சுவாமி கோயில் உள்ளது.
இக்கோயில் எதிரில் வாசுகி தீர்த்த குளம் அமைந்துள்ளது.
இது பல ஆண்டுகளாக கவனிப்பாரற்று பயன்படுத்த முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது.
இது குறித்து தினமலர் நாளிதழ் தொடர்ந்து சுட்டிக்காட்டும் நிலையில் நயினார்கோவிலில் வாசுகி தீர்த்த பாதுகாப்பு சங்கம் கூட்டம் நடந்தது.
தலைவர் துரைப்பாண்டி தலைமை வகித்தார். செயலாளர் பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். பொருளாளர் தட்சிணாமூர்த்தி வரவேற்றார்.
அப்போது குளத்தை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தடுப்பு வேலி அமைத்து பேவர் கல்தளம் அமைக்க வேண்டும்.
தொண்டு நிறுவனங்கள் மற்றும் தீர்த்த திருப்பணி குழு இணைந்து மக்களிடம் நன்கொடை பெற்று வாசுகி தீர்த்த குளத்திற்கு தண்ணீர் வரும் பாதையை சீரமைக்க வேண்டும்.
வரும் கூட்டத்தில் ராமநாதபுரம் சமஸ்தானம் ராணி உள்ளிட்ட நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை மேற்கொள்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நயினார்கோவில் ஒன்றியத்தை சேர்ந்த ஊராட்சி தலைவர்கள், விவசாய சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.

