/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
நகர்புற சுகாதார நிலையம் அருகே கழிவுநீரால் உவ்வே
/
நகர்புற சுகாதார நிலையம் அருகே கழிவுநீரால் உவ்வே
ADDED : மே 10, 2024 11:27 PM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் நகராட்சி கமிஷனர் குடியிருப்பு ஒட்டி புதிய ஆரம்ப சுகாதாரநிலையம் அருகே குளம் போல கழிவுநீர் தேங்கியுள்ளதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது.
ராமநாதபுரம் லேத்தஸ் பங்களா ரோடு பஜார் போலீஸ் ஸ்டேஷன், நகராட்சி கமிஷனர் குடியிருப்பு மற்றும் நகர்புற மேம்பாட்டு திட்டத்தில் புதிதாக ஆரம்ப சுகாதாரநிலையம் அருகே பாதாள சாக்கடை குழாய் சேதமடைந்து கடந்த சில நாட்களாக குளம் போல கழிவுநீர் தேங்கியுள்ளது.
இதனால் அப்பகுதியில் துர்நாற்றத்தால் அருகேயுள்ள போலீஸ் குடியிருப்பு, ஸ்டேஷன் பணியாளர்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே உடனடியாக தேங்கிய கழிவுநீரை அகற்ற நகராட்சி அதிகாரிகள் முன்வர வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.