நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கமுதி: கமுதி அருகே நெறிஞ்சிப்பட்டி கிராமத்தில் காளியம்மன், முனியப்பசாமி கோயில் சித்திரை மாத பொங்கல் விழாவை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடந்தது. இதில் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், புதுக்கோட்டை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 13 காளைகள் கலந்து கொண்டன.
ஒவ்வொரு காளைக்கும் தலா 9 வீரர்கள் களம் இறக்கப்பட்டு 20 நிமிடம் ஒதுக்கப்பட்டது. போட்டியில் வெற்றி பெற்ற காளைகள், வீரர்களுக்கு கிராமத்தின் சார்பில் குத்து விளக்கு, ரொக்கப் பணம் வழங்கப்பட்டது. 10க்கும் மேற்பட்ட வீரர்களுக்கு சிறு காயங்கள் ஏற்பட்டது.