/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
துார் வாராததால் வைகை அணை நீர்த்தேக்கம் பாதிப்பு
/
துார் வாராததால் வைகை அணை நீர்த்தேக்கம் பாதிப்பு
ADDED : ஜூலை 04, 2024 02:08 AM
ராமநாதபுரம்:வைகை அணை மொத்த உயரம் 71 அடி. ஆனால், 20 அடிக்கு சேறும் சகதியும் நிரம்பியுள்ளது. அணையின் முழுக்கொள்ளளவு 6.14 டி.எம்.சி. சகதியால் 20 அடி போக 5 டி.எம்.சி., மட்டுமே தேக்க முடிகிறது.
எனவே வைகை அணையை துார் வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். வைகை பூர்வீக பாசன விவசாயிகள் சங்க பொதுச் செயலர் ஆதிமூலம் கூறியதாவது:
கடந்த 2010ல் பார்லிமென்ட் நிலைக்குழு வந்தபோது, விவசாயிகள் தரப்பில் துார் வார கோரிக்கை விடுக்கப்பட்டது. அப்போது, ஜப்பான் நிதியுதவியுடன் 100 கோடியில் நவீன தொழில் நுட்பத்தில் துார் வாரப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால், என்ன காரணமோ அது நிறைவேறவில்லை.
எனவே வைகை அணையை துார் வார தமிழக அரசும், பொதுப்பணித்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.