/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பார்த்திபனுார் மதகில் இருந்து பரமக்குடி வந்த வைகை நீர்; 2000 கன அடி ராமநாதபுரம் வருகிறது

ADDED : மே 15, 2024 06:45 AM

பரமக்குடி : ராமநாதபுரம் மாவட்ட குடிநீர் தேவைக்காக திறக்கப்பட்ட வைகை அணை நீர் பார்த்திபனுார் மதகு அணையில் இருந்து பரமக்குடி நோக்கி வந்தது.
இந்த ஆண்டு கோடை வெயில் வழக்கத்தை விட அதிகமாக இருந்த நிலையில் ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட குடிநீர் தேவைக்கு வைகை அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இதன்படி மே 10ம் தேதி வினாடிக்கு 3000 கன அடி வீதம் திறந்து விடப்பட்டது. தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்ட எல்லையான பார்த்திபனுார் மதகு அணையை நேற்று முன்தினம் இரவு வந்தடைந்தது. இங்கிருந்து சிவகங்கை மாவட்டத்திற்கு கால்வாய் வழியாக தண்ணீர் பிரித்து விடப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்ட குடிநீர் தேவைக்கு பார்த்திபனுார் வைகை ஆறு வழியாக 5 மதகுகள் மூலம் தண்ணீர் திறக்கப்பட்டது. இதன்படி 2000 கன அடி வீதம் நேற்று இரவு பரமக்குடியை கடந்து சென்றது. வரும் நாட்களில் ராமநாதபுரம் கண்மாயை தண்ணீர் சென்றடையும். ராமநாதபுரத்திற்கு 5 நாட்களுக்கு மொத்தம் 915 மில்லியன் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் வைகை பாசனம் மற்றும் பொதுமக்களின் குடிநீர் தேவை பூர்த்தி செய்ய முடியும் என்பதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் ஆற்றில் தண்ணீர் சென்று வரும் சூழலில் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென பொதுப்பணித்துறையினர், போலீசார் கோரிக்கை விடுத்துள்ளனர்.