நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கமுதி: -கமுதி காமாட்சி அம்மன் கோயில் வைகாசி பொங்கல் விழா மே 14ல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது.
சிறப்பு நிகழ்ச்சியாக 508 விளக்கு பூஜை நடந்தது. தினந்தோறும் காமாட்சி அம்மன் சிம்ம வாகனம், மயில் உட்பட பல்வேறு வாகனங்களில் சிறப்பு அலங்காரம் செய்து முக்கிய வீதிகளில் உலா நடந்தது. பக்தர்கள் பொங்கல் வைத்து நேர்த்திகடன் செலுத்தினர். நிறைவு நிகழ்ச்சியாக கோயிலில் இருந்து முக்கிய வீதிகளில் முளைப்பாரி துாக்கி ஊர்வலமாக சென்று குண்டாறில் கரைத்தனர். இதற்கான ஏற்பாடுகளை கவுரவ செட்டியார்கள் உறவின் முறை நிர்வாகிகள், இளைஞர்கள் செய்தனர்.