/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
நரிப்பையூர் கோயிலில் வைகாசி பொங்கல் விழா
/
நரிப்பையூர் கோயிலில் வைகாசி பொங்கல் விழா
ADDED : மே 29, 2024 05:21 AM
சாயல்குடி : யல்குடி அருகே நரிப்பையூரில் சந்தன மாரியம்மன் கோயிலில் வைகாசி பொங்கல் விழா நடந்தது.
நேற்று அதிகாலையில் தீர்த்தக்கரையில் இருந்து புனித நீராடிய பக்தர்கள் பால்குடங்களை தலையில் சுமந்தபடி நகர் வலம் வந்தனர். சந்தன மாரியம்மன் கோயிலில் ஏராளமான நேர்த்திக்கடன் பக்தர்கள் அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்தனர்.
பின்னர் நடந்த குதிரை எடுப்பு விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று குதிரை உள்ளிட்ட உருவ சிலைகளை ஊர்வலமாக கொண்டு வந்து கட்டட வளாகத்தில் வைத்து கண் திறக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.