/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வலம்புரி விநாயகர் கும்பாபிஷேகம்
/
வலம்புரி விநாயகர் கும்பாபிஷேகம்
ADDED : ஏப் 27, 2024 04:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் ஆனந்துார் அருகே தலக்காவூரில் வலம்புரி விநாயகர், பெரியநாயகி அம்மன், சிங்கமுக மாரியம்மன் ஆகிய மூன்று கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக கோயில்களில் கணபதி ஹோமம் மற்றும் முதல் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.
தொடர்ந்து நான்காம் கால யாகசாலை பூஜைகள்,பூர்ணாகுதி மற்றும் கோ பூஜை நடைபெற்றது.
பின்பு, யாகசாலையில் பூஜை செய்யப்பட்ட புனித நீர் கோயில் கோபுரங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
தொடர்ந்து மூலவர்களுக்கு நடைபெற்ற அபிேஷக ஆராதனையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம்செய்தனர். விழாவை முன்னிட்டு அன்னதானம் நடைபெற்றது.

