நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரமக்குடி: பரமக்குடி அருகே காமன்கோட்டை வி.ஏ.ஓ., கார்த்திகேயன் 40, நிலை தடுமாறி மயங்கி விழுந்து பலியானார்.
பரமக்குடி புளிய மரத்தெருவை சேர்ந்தவர் கார்த்திகேயன் 40. இவர் காமன் கோட்டை வி.ஏ.ஓ.,வாக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் மதியம் மதுரை- ராமேஸ்வரம் ரோட்டில் நடந்து சென்றார்.
மதியம் 2:30 மணிக்கு திடீரென ரோட்டோரம் நிலை தடுமாறி மயங்கி விழுந்தார். பின் தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்ற பின் பரமக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த டாக்டர்கள்வி.ஏ.ஓ., ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். நேற்று பிரேத பரிசோதனைக்கு பின் கார்த்திகேயன் உடல் ஒப்படைக்கப்பட்டது. மனைவி ரூபிணி 28, புகாரில் பரமக்குடி டவுன் எஸ்.ஐ., சரவணன் விசாரிக்கிறார்.