/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., சஸ்பெண்ட்
/
லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., சஸ்பெண்ட்
ADDED : ஜூலை 02, 2024 10:13 PM
முதுகுளத்துார்: விதவை உதவித்தொகை பெறுவதற்கு விண்ணப்பம் செய்தவரிடம் ரூ.5000 லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ.,பூமிசந்திரன் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்ட நிலையில் அவரை சஸ்பெண்ட் செய்து பரமக்குடி சப்-கலெக்டர் அபிலாஷா கவுர் உத்தரவிட்டார்.
முதுகுளத்துார் அருகே சிறுமணியேந்தலை சேர்ந்தவர் பாண்டித்துரை 62. இவரது விதவை மகளுக்கு மாதாந்திர பென்ஷன் தொகை பெற விண்ணப்பித்திருந்தார். இதுகுறித்து நல்லூர் குரூப் வி.ஏ.ஓ., பூமிசந்திரன் உயர் அதிகாரிகளுக்கு கொடுக்க ரூ.6000 லஞ்சம் கேட்டுள்ளார்.
இதுகுறித்து பாண்டித்துரை ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். ஜூலை 1ல் முதுகுளத்துார் தாலுகா அலுவலகம் அருகே மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., ராமச்சந்திரன் தலைமையிலான போலீசார் பாண்டித்துரையிடம் ரூ.5000 லஞ்சம் பெற்ற வி.ஏ.ஓ., பூமிசந்திரனை கையும் களவுமாக கைது செய்தனர்.
இதையடுத்து வி.ஏ.ஓ., பூமிசந்திரன் சிறையில் அடைக்கப்பட்டதால் அவரை சஸ்பெண்ட் செய்து பரமக்குடி சப்-கலெக்டர் அபிலாஷா கவுர் உத்தரவிட்டார்.