/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வராகி அம்மன் கோயிலில் வளர்பிறை பஞ்சமி பூஜை
/
வராகி அம்மன் கோயிலில் வளர்பிறை பஞ்சமி பூஜை
ADDED : ஜூன் 11, 2024 10:55 PM

உத்தரகோசமங்கை : உத்தரகோசமங்கை வராகி அம்மன் கோயிலில் வளர்பிறை பஞ்சமியை முன்னிட்டு அபிேஷகம், அலங்காரத்தில் பூஜைகள் நடந்தது.
அம்மனுக்கு பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம், மஞ்சள் பொடி திரவிய பொடி உள்ளிட்ட 16 வகையான அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. பட்டு சாத்தியும், தங்க கவச அலங்காரத்தில் பஞ்சமுக தீபாராதனையில் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
எலுமிச்சை, தேங்காய் உள்ளிட்டவைகளில் விளக்கேற்றியும், அம்மி கல்லில் பச்சைவிரலி மஞ்சள் அரைத்து உருண்டையாக பெண்கள் நேர்த்திக்கடன் பூஜைகளை செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது.
இதுபோல பஞ்சமியை முன்னிட்டு ராமநாதபுரம் தலைமை தபால்நிலையம் அருகேயுள்ள உச்சிஷ்ட கணபதி கோயிலில் மங்கள வராகி அம்மனுக்கு அபிேஷகம் செய்து, அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.