/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
நமினார்கோவில் வாசுகி தீர்த்த பாதுகாப்பு சங்க கூட்டம்
/
நமினார்கோவில் வாசுகி தீர்த்த பாதுகாப்பு சங்க கூட்டம்
நமினார்கோவில் வாசுகி தீர்த்த பாதுகாப்பு சங்க கூட்டம்
நமினார்கோவில் வாசுகி தீர்த்த பாதுகாப்பு சங்க கூட்டம்
ADDED : ஜூன் 27, 2024 04:17 AM
நயினார்கோவில், : -பரமக்குடி அருகே நயினார்கோவிலில் நாகநாத சுவாமி கோயில் வாசுகி தீர்த்த பாதுகாப்பு சங்க ஆலோசனை கூட்டம் நடந்தது. தலைவர் ரத்தின சபாபதி தலைமை வகித்தார்.
மழைக்காலம் துவங்குவதற்கு முன் தீர்த்த குளத்திற்கு தண்ணீர் வரும் கால்வாயை சீரமைக்க வேண்டும். மேற்கு, தென்மேற்கு பகுதிகளில் ஊருணிக்கு நீர் வரும் கல்வெட்டை சீரமைக்க வேண்டும். மேலும் மருதுார் அம்மன் கோயில் ஊருணியை துார்வாரி கல்வெட்டை சீரமைக்க வேண்டும்.
வாசுகி தீர்த்த குளக்கரையில் உள்ள ஆக்கிரமங்களை அகற்றி படித்துறையை சரி செய்ய வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தொடர்ந்து சங்கம் சார்பில் மக்கள் பங்களிப்பு தொகையாக ஒரு லட்சம் ரூபாய் வங்கியில் சங்க கணக்கில் செலுத்த தீர்மானித்தனர்.
கூட்டத்தில் விவசாயிகள் சங்க தலைவர் மதுரை வீரன், கோயில் அதிகாரி விக்னேஸ்வரன் உட்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.