/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமேஸ்வரம் கோயில் வீதியில் வாகனத்திற்கு தடை
/
ராமேஸ்வரம் கோயில் வீதியில் வாகனத்திற்கு தடை
ADDED : ஜூலை 23, 2024 05:07 AM

ராமேஸ்வரம்: ஆடித் திருக்கல்யாண விழாவையொட்டி ராமேஸ்வரம் கோயில் வீதியில் சுவாமி, அம்மன்உலா வருவதால் வாகனங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என பா.ஜ.,வினர் தெரிவித்தனர்.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஆடித் திருக்கல்யாணம் விழா ஜூலை 29ல் கொடி ஏற்றத்துடன் துவங்குகிறது. விழா ஆக.14 வரை தொடர்ந்து நடக்கும். தொடர்ந்து 17 நாட்கள் நடக்கும் ஆடித் திருவிழாவில் சுவாமி, அம்மன் தங்கம், வெள்ளி வாகனத்தில் கோயில் நான்கு ரத வீதியில் உலா வருவர்.
அப்போது வீதியெங்கும்பக்தர்கள் கூடியிருந்து சுவாமி தரிசனம் செய்வார்கள். இச்சமயத்தில் கோயில் வீதியில் வாகனங்கள் செல்வதால் சுவாமி, அம்மன் வாகனத்திற்கு இடையூறு ஏற்படுவதால் பக்தர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
பா.ஜ., மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராமு கூறியதாவது:
ராமேஸ்வரம் கோயில் முக்கிய விழாவான ஆடித் திருவிழா நடக்கும் நாளில் சுவாமி, அம்மன் வாகனத்தில் ரத வீதியில் உலா வரும் போது வாகனங்கள் தாறுமாறாக சென்று போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் கோயில் புனிதம் கெடுவதுடன், பக்தர்களும் பாதிக்கப்படுகின்றனர்.
எனவே ஆடித் திருவிழா நாட்களில் ரத வீதியில் குறிப்பாக மேற்கு ரத வீதியில் வாகனங்கள் செல்ல போலீசார் தடை விதிக்க வேண்டும். இதனால எவ்வித இடையூறும் இன்றி கோயில் தேர், வாகனங்கள் உலா வரும் என்றார்.