/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
காலி பணியிடங்களை நிரப்பக் கோரி கிராம செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்
/
காலி பணியிடங்களை நிரப்பக் கோரி கிராம செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்
காலி பணியிடங்களை நிரப்பக் கோரி கிராம செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்
காலி பணியிடங்களை நிரப்பக் கோரி கிராம செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூன் 25, 2024 11:01 PM

ராமநாதபுரம்: துணை சுகாதார நிலையங்களில் உள்ள கிராம சுகாதார செவிலியர் காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசின் பொது சுகாதாரத்துறை கிராமப் பகுதி சமுதாய சுகாதார செவிலியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் விமலா, சியா தலைமை வகித்தனர். நிர்வாகிகள் மாலா, ராஜலட்சுமி, பானுமதி உட்பட பலர் பங்கேற்றனர்.
துணை சுகாதார நிலையங்களில் காலியாகவுள்ள கிராம சுகாதார செவிலியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். புதிதாக துவங்கவுள்ள துணை சுகாதார நிலையங்களில் கிராமப்புற செவிலியர்களை நியமிக்க வேண்டும். பணி செய்வதற்கான பிக்மி 3.0 வெர்ஷனை எளிமைப்படுத்தும் வரை ஆய்வு செய்வதை தவிர்க்க வேண்டும்.
குடும்ப நல பதிவேட்டை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய கட்டாயப்படுத்துவதை கைவிட வேண்டும். ஒரு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ஒரு டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் நியமிக்க வேண்டும். கர்ப்பிணி பதிவையும், மகப்பேறு நிதியுதவி திட்டத்தையும் எளிமைப்படுத்த வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.