/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தனி நபர் வயலில் 100 நாள் வேலை வாங்குவதாக கிராம மக்கள் புகார்
/
தனி நபர் வயலில் 100 நாள் வேலை வாங்குவதாக கிராம மக்கள் புகார்
தனி நபர் வயலில் 100 நாள் வேலை வாங்குவதாக கிராம மக்கள் புகார்
தனி நபர் வயலில் 100 நாள் வேலை வாங்குவதாக கிராம மக்கள் புகார்
ADDED : ஜூலை 01, 2024 10:30 PM

ராமநாதபுரம்:
கடாலடி அருகே வி.சேதுராஜபுரத்தில் நுாறு நாள் வேலை திட்டத்தில் தனிநபர் வயலில் வேலை செய்ய வற்புறுத்துவதாக ஊராட்சி நிர்வாகம் மீது கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பது:
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் தனிநபர் வயலில் அறுவடை செய்து காய்ந்த மிளகாய் செடிகளை அகற்ற ஊராட்சி அதிகாரிகள் வற்புறுத்துகின்றனர். இதை பார்த்து மற்ற விவசாயிகளும் எங்களது தோட்டத்தில் வேலை பார்க்க வேண்டும் எனக்கூறுவதால் தேவையில்லாத சர்ச்சை, கருத்து வேறுபாடுகள் ஏற்படுகிறது.
இது தொடர்பாக கலெக்டர் விசாரணை செய்து நுாறு நாள் வேலை திட்டத்தில் பொது இடங்களில் பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.