/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஜமீன்தார்வலசையில் குடிநீர் கிணறு அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு
/
ஜமீன்தார்வலசையில் குடிநீர் கிணறு அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு
ஜமீன்தார்வலசையில் குடிநீர் கிணறு அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு
ஜமீன்தார்வலசையில் குடிநீர் கிணறு அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு
ADDED : ஆக 17, 2024 12:19 AM

ராமநாதபுரம் : தேவிபட்டினம் ஊராட்சிக்கு அருகில் உள்ள சித்தார்கோட்டை ஊராட்சி ஜமீன்தார் வலசையில் குடிநீர் கிணறு அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தி அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜமீன்தார் வலசை கிராமத்தில் குடிநீர் கிணறுகள் அமைக்கப்பட்டு குழாய் வழியாக தேவிபட்டினம் ஊராட்சிக்கு குடிநீர் வழங்கப்படுகிறது. மேலும் கிணறு அமைக்க நேற்று தேவிபட்டினம் ஊராட்சி நிர்வாகத்தினர் மண் அள்ளும் இயந்திரங்களுடன் வந்தனர்.
ஜமீன்தார்வலசை கிராம மக்கள் இயந்திரங்களை சிறைப்பிடித்து பணிக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். தங்களுக்கே தண்ணீர் இல்லாத நிலை உள்ளது. முறையான அனுமதி இன்றி இங்கிருந்து குடிநீரை எடுத்து தேவிப்பட்டினம் ஊராட்சியில் விற்பதாக மக்கள் புகார் தெரிவித்தனர்.
ராமநாதபுரம் தாசில்தார் சாமிநாதன், கூடுதல் எஸ்.பி., சிவராமன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். தேவிபட்டினம் ஊராட்சி நிர்வாகத்திடம் உரிய அனுமதி உள்ளது. பணியை நிறுத்த வேண்டும் எனில் நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற வேண்டும் என அதிகாரிகள் கூறினர்.
ஜமீன்தார்வலசை மக்கள் கலெக்டரிடம் முறையிட உள்ளோம். அதுவரை பணி மேற்கொள்ள முடியாது என்றதால் பணிகள் நிறுத்தப்பட்டது. இதையடுத்து கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோனை சந்தித்து பிரச்னைக்கு தீர்வுகாண வலியுறுத்தினர்.

