/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம்
/
வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம்
ADDED : மார் 22, 2024 04:43 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: -ராமநாதபுரம் அரண்மனைப்பகுதியில் வாக்காளர்கள் நுாறு சதவீதம் ஓட்டளிக்க வலியுறுத்தி மகளிர் திட்டம் சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. விழிப்புணர்வு ஊர்வலத்தினை கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) வீர் பிரதாப் சிங் துவங்கி வைத்தார். இதில் மகளிர் சுய உதவிக்குழுவினை சேர்ந்த பெண்கள் விழிப்புணர்வு பதாகைகளுடன் நகரின் முக்கிய வீதிகளில் வலம் வந்தனர்.
இந்நிகழ்ச்சியில் பயிற்சி கலெக்டர் சிவானந்தம், மகளிர் திட்ட அலுவலர் செய்யது சுலைமான், உதவி திட்ட அலுவலர்கள் அரவிந்த், அழகப்பன், தங்கப்பாண்டி, ராஜா முகமது ஆகியோர் பங்கேற்றனர்.-----------

