/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
காலை 11:00 மணிக்கு ஓட்டுப்பதிவு
/
காலை 11:00 மணிக்கு ஓட்டுப்பதிவு
ADDED : ஏப் 20, 2024 04:53 AM
கடலாடி: கடலாடி அருகே சவேரியார்பட்டினத்தைச் சேர்ந்தவர் முன்னாள் ராணுவ வீரர் குழந்தை 62. இவர் இரு தினங்களுக்கு முன் மாரந்தை கிராமத்தில்நடந்த மராமத்து பணிகளை இயந்திரத்தில் செய்தார். அப்போது கடலாடி அருகே ஆப்பனுார் முன்னாள் ஊராட்சித் தலைவர் முருகானந்தம் 50, என்பவருடன் பிரச்னை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் முருகானந்தம் ஆதரவாளர்கள் 10 பேருடன் முன்னாள் ராணுவ வீரர் குழந்தையை ஆயுதங்களால் தாக்கினர். காயமடைந்த முன்னாள் ராணுவ வீரர் குழந்தை மதுரையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இதையடுத்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நேற்று காலை 7:00 மணிக்கு அங்குள்ள ஓட்டுச்சாவடி முன் திரண்டனர்.
ராணுவ வீரரை தாக்கியவர்களை கைது செய்தால் தான் எங்களது போராட்டத்தை கைவிடுவோம் என அறிவித்தனர்.
பரமக்குடி சப் கலெக்டர் அபிலாஷ் கவுர், கடலாடிதாசில்தார் ரங்கராஜ், முதுகுளத்துார் டி.எஸ்.பி., சின்னக்கண்ணு உள்ளிட்டோர் கிராம மக்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.
தாக்குதலில் ஈடுபட்டவர்களை கண்டிப்பாக கைது செய்வோம் என உறுதி அளித்ததின் பேரில் நேற்று காலை 11:00 மணிக்கு மேல் கிராம மக்கள் ஓட்டளித்தனர்.

