sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

​வ.உ.சி., பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

/

​வ.உ.சி., பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

​வ.உ.சி., பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

​வ.உ.சி., பிறந்தநாள் விழா கொண்டாட்டம்


ADDED : செப் 06, 2024 04:55 AM

Google News

ADDED : செப் 06, 2024 04:55 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் வெள்ளாளர் முன்னேற்ற கழகம் சார்பில்அரண்மனை பகுதியில் சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சி., பிறந்த நாள் விழா கொண்டாடினர்.

ராமநாதபுரம் மாவட்ட ரியல் எஸ்டேட் சங்க தலைவர் ஜெயபாண்டியன்,வி.எம்.கே., மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வன்னி பிரபு, பா.ஜ., மாவட்ட தலைவர் தரணி முருகேசன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.இனிப்புகள் வழங்கப்பட்டது.ராமநாதபுரம் வ.உ.சி., வெள்ளாளர் நலச்சங்கம் சார்பில் வ.உ.சி., உருவப்படத்திற்கு மலர்துாாவி மரியாதை செய்தனர்.கிரசண்ட் ரத்த ஆராய்ச்சி மையத்துடன் இணைந்து ரத்த தானம் நடந்தது. அ.தி.மு.க., மாநில மகளிர் அணி இணைச் செயலாளர் கீர்த்திகா, விருதுநகர் மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சரவணக்குமார், ராமநாதபுரம் நகர செயலாளர் பால்பாண்டியன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

* சாயல்குடியில் வெள்ளாளர் உறவின் முறை சார்பில் வ.உ.சிதம்பரம் பிள்ளை பிறந்த நாளை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு மலர் துாவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

வெள்ளாளர் உறவின் முறை தலைவர் நாகராஜன் தலைமை வகித்தார். முன்னாள் ராணுவ வீரர் பாலமுருகன் முன்னிலை வகித்தார். சங்க பொருளாளர் திருஞானசம்பந்த மூர்த்தி, செல்லப்பா உட்பட பலர் கலந்து கொண்டனர். மாணவர்களுக்கு இனிப்புகள் மற்றும் நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டது.

* பரமக்குடி அனைத்து வெள்ளாளர் மகாசபை சார்பில் காட்டு பரமக்குடியில் உள்ள வ.உ.சி., முழு உருவ வெண்கல சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

சபை தலைவர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் இருளப்பன், சவரிமுத்து, வின்சென்ட் ஜெயக்குமார், ராதாகிருஷ்ணன், ராமலிங்கம், கனகராஜ், மகேஸ்வரன், கோவிந்தன், லோகநாத முருகன் வாழ்த்தினர்.

வ.உ.சி., மெட்ரிக் பள்ளியில் நடந்த பிறந்தநாள் மற்றும் ஆசிரியர் தின விழாவில் முதல்வர் ராணி வரவேற்றார்.

மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. கோவிந்தராஜன் நன்றி கூறினார். இதேபோல் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ., ம.தி.மு.க., உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் மரியாதை செய்தனர்.

*ராமேஸ்வரம் வ.உ.சி., பேரவை சார்பில் சிவாஸ்ரமத்தில் அலங்கரிக்கப்பட்ட வ.உ.சி., படத்திற்கு மக்கள் மலர் துாவி அஞ்சலி செலுத்தினர். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவி முத்துமகிமாவுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.

ஏழைகளுக்கு தலா 5 கிலோ அரிசி பைகளும், சிவாஸ்ரமம் மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.

சுவாமி பிரணவனந்தா, ராமேஸ்வரம் வ.உ.சி., பேரவை தலைவர் வேடராஜன், நிர்வாகிகள் சரவணன், தட்சிணாமூர்த்தி, ரவிக்குமார், பிரகாஷ், தவமணி உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us