/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
முதியோர் உதவித் தொகைக்கு விண்ணப்பித்தோர் காத்திருப்பு
/
முதியோர் உதவித் தொகைக்கு விண்ணப்பித்தோர் காத்திருப்பு
முதியோர் உதவித் தொகைக்கு விண்ணப்பித்தோர் காத்திருப்பு
முதியோர் உதவித் தொகைக்கு விண்ணப்பித்தோர் காத்திருப்பு
ADDED : மார் 09, 2025 05:15 AM
கடலாடி : கடலாடி தாலுகாவில்முதியோர் உதவித்தொகைக்கு விண்ணப்பித்த பலர் இரண்டு ஆண்டுகளாக காத்திருக்கின்றனர்.
முதியோர் உதவித்தொகை, கணவனால் கைவிடப்பட்டோர், விதவைகள் உள்ளிட்டோருக்கு அரசின் உதவித்தொகை மாதந்தோறும் வழங்கப்படுகிறது. இந்நிலையில் 2023 செப்.,ல் விண்ணப்பித்தவர்களுக்கு முறையாக ஒப்புதல் கிடைத்துஉள்ளது. இத்திட்டம் பெயரளவில் உள்ளதாக மக்கள் வேதனை தெரிவித்தனர்.
சாயல்குடியை சேர்ந்த பா.ஜ., விவசாய அணி மாவட்ட நிர்வாகி சத்தியமூர்த்தி கூறியதாவது:
கடலாடி தாலுகாவில் முதியோர் உதவித்தொகை கேட்டு பலர் 2023ல் விண்ணப்பித்துஉள்ளனர். இவர்களுக்கு ஒப்புதல் அளித்த நிலையில் அவர்களின் வங்கிக் கணக்கில் இதுவரை பணம் வரவு வைக்கப்படவில்லை. இது போல் நுாறுக்கும் மேற்பட்டவர்கள் தொடர்ந்து காத்திருக்கின்றனர்.
ஒவ்வொரு முறையும் கடலாடி தாலுகா அலுவலகத்திற்கு சென்று அலைந்து ஏமாற்றத்துடன்திரும்புகின்றனர். எனவே கடலாடி தாலுகா அலுவலகத்தினர் முதியவர்களை அலைக்கழிக்காமல் முறையானவர்களை கண்டறிந்து உதவித்தொகை வழங்க வேண்டும் என்றார்.