ADDED : மே 22, 2024 05:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம் : கமுதி அருகே மந்திரியேந்தல் கிராமத்தை சேர்ந்த கருப்பையா மகன் பிரபு 27. இவர் திருவாடானை ஆட்டாங்குடி பகுதியில் உள்ள செங்கல் சூளையில் 2023 ல் பணிபுரிந்து வந்தார். அப்போது அங்கு பணிபுரிந்த 17 வயது சிறுமியை கர்ப்பிணியாக்கினார்.
சிறுமி புகாரில் பிரபு மீது போலீசார் போக்சோ வழக்குப்பதிவு செய்தனர். இன்ஸ்பெக்டர் ராதா விசாரித்தார். இந்த வழக்கு விசாரணை ராமநாதபுரம் விரைவு மகிளா நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
விசாரணை அதிகாரியான ராதா தற்போது மதுரை மாவட்டம் மேலுார் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டராக பணிபுரிகிறார். அவர் விசாரணைக்கு ஆஜராகாததால் நீதிபதி கோபிநாத் பிடிவாரன்ட் பிறப்பித்தார்.

