ADDED : ஆக 23, 2024 02:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்,:-போக்சோ வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத மதுரை பெண் இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து ராமநாதபும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் நீலகண்ட காலனியை சேர்ந்த மீனவர் பிரகாஷ்ராஜ் என்பவர் அதே பகுதியை சேர்ந்த சிறுமியை 2020 மே 21 ல் பாலியல் தொந்தரவு செய்துள்ளார். ராமேஸ்வரம் மகளிர் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டராக இருந்த நாகசாந்தி இதை விசாரித்தார்.
ராமநாதபுரம் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடக்கிறது.
விசாரணையில் நாகசாந்தி ஆஜராகாததால் அவருக்கு நீதிபதி கோபிநாத் நேற்று பிடிவாரன்ட் பிறப்பித்து உத்தரவிட்டார். தற்போது அவர் மதுரை திடீர் நகர் போலீஸ் இன்ஸ்பெக்டராக உள்ளார்.

