/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
விசாரணைக்கு ஆஜராகாத இரண்டு இன்ஸ்பெக்டர்களுக்கு பிடிவாரன்ட்
/
விசாரணைக்கு ஆஜராகாத இரண்டு இன்ஸ்பெக்டர்களுக்கு பிடிவாரன்ட்
விசாரணைக்கு ஆஜராகாத இரண்டு இன்ஸ்பெக்டர்களுக்கு பிடிவாரன்ட்
விசாரணைக்கு ஆஜராகாத இரண்டு இன்ஸ்பெக்டர்களுக்கு பிடிவாரன்ட்
ADDED : ஏப் 24, 2024 10:11 PM
ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் குருவிக்கார தெருவை சேர்ந்தவர் ஜோதி 35. குடும்ப பிரச்னையில் இவரை கணவன் ஜெகன் கொலை செய்தார். இந்த வழக்கு விசாரணை ராமநாதபுரம் மாவட்ட விரைவு மகிளா நீதிமன்றத்தில் நடக்கிறது. இந்த வழக்கு விசாரணைக்கு சாட்சியளிக்க அப்போதைய விசாரணை அதிகாரியான திருச்சி திருவெறும்பூர் இன்ஸ்பெக்டர் தனபாலன் தொடர்ந்து ஆஜராகவில்லை. இதையடுத்து நீதிபதி கோபிநாத், இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து நேற்று உத்தரவிட்டார்.
* திருப்பாலைக்குடி சமயரஞ்சனி 20. இவர் 2013ல் தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கு விசாரணை ராமநாதபுரம் மாவட்ட விரைவு மகிளா நீதிமன்றத்தில் நடக்கிறது. விருதுநகர் பஜார் போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றும் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் , இந்த வழக்கில் ஆஜராகவில்லை.
இதையடுத்து இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து நீதிபதி கோபிநாத் உத்தரவிட்டார்.