ADDED : ஏப் 08, 2024 05:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாயல்குடி : கொளுத்தும் கோடை வெயிலால் கடைகளில் குளிர்பானங்கள் அதிகளவு விற்பனை ஆகின்றன. செயற்கை குளிர்பானங்களுக்கு மத்தியில் இயற்கை பானமான இளநீருக்கு மவுசு அதிகரித்தள்ளது.
கடந்த மாதம் ரூ.50க்கு விற்ற இளநீர் ஏப்., முதல் வாரத்தில் இருந்து ரூ.60க்கு விற்பனை செய்யப்படுகிறது. சாயல்குடி இளநீர் வியாபாரி கூறியதாவது:
கோடை வெயிலின் தாக்கத்தால் ஏராளமானோர் இயற்கையாக கிடைக்கும் இளநீர் பருகுகின்றனர். பொள்ளாச்சி, மதுரை உள்ளிட்ட பகுதியில் இருந்து பெறப்படும் இளநீர் விற்பனை செய்யப்படுகிறது. வாடகை மற்றும் போக்குவரத்துச் செலவுகளால் விலை உயர்கிறது. ரூ.60-க்கும் 50-க்கும் சைஸ் வாரியாக இளநீர் விற்கப்படுகிறது என்றார்.

