/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கொட்டாங்குடியில் குடிநீர் தட்டுப்பாடு
/
கொட்டாங்குடியில் குடிநீர் தட்டுப்பாடு
ADDED : ஏப் 25, 2024 05:39 AM

திருவாடானை, : திருவாடானை அருகே கல்லுார் ஊராட்சி கொட்டாங்குடியில் 50க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. ஆங்காங்கே தனித் தனி வீடுகளாக அமைந்துள்ள இக்குடியிருப்புகளில் தெருக்குழாய்கள் அமைக்கப்பட்டன.
சில குழாய்கள் அக்கிராம கண்மாய்க்குள் உள்ளது.போதுமான குடிநீர் சப்ளை இல்லாததால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து கிராமத்தினர் கூறுகையில், போதுமான குடிநீர் சப்ளை இல்லை. நான்கு அல்லது ஐந்து நாட்களுக்கு ஒரு முறை சப்ளை செய்யப்படுகிறது.
அதிலும் போதுமான தண்ணீர் கிடைக்காததால் பெரும் சிரமமாக உள்ளது. கண்மாயில் தேங்கிய நீரும் இன்னும் சில நாட்களுக்குள் வற்றி விடும். குழாயிலிருந்து தண்ணீர் வருமா என அடிக்கடி சென்று பார்க்க வேண்டியுள்ளது என்றனர்.

