/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
திருவாடானை, தொண்டியில் குடிநீர் தட்டுபாடு: மக்கள் அவதி
/
திருவாடானை, தொண்டியில் குடிநீர் தட்டுபாடு: மக்கள் அவதி
திருவாடானை, தொண்டியில் குடிநீர் தட்டுபாடு: மக்கள் அவதி
திருவாடானை, தொண்டியில் குடிநீர் தட்டுபாடு: மக்கள் அவதி
ADDED : ஆக 25, 2024 10:48 PM
திருவாடானை:
திருவாடானை, தொண்டியில் பத்து நாட்களுக்கு மேலாக குடிநீர் வராமல் மக்கள் சிரம ப்படுகின்றனர்.
திருவாடானையில் மங்களநாதன் குளத்தில் அமைக்கபட்ட ஆழ்துளை கிணறு திட்டம் தோல்வியடைந்ததால், மாற்று ஏற்பாடாக குடிநீர் வடிகால் வாரியம் அமைத்த ஆழ்துளை கிணற்றிலிருந்து குடிநீர் வினியோகம் செய்யபட்டது. அதிலும் மோட்டார் பழுது ஏற்பட்டதால் 10 நாட்களாக குடிநீர் வரவில்லை.
இதனால் திருவாடானை மக்கள் குடிநீர் கிடைக்காமல் சிரமப்படுகின்றனர். இதே போல் தொண்டிக்கு ஆட்டூர் கோவனி கூட்டு குடிநீர் திட்டத்தில் வினியோகம் செய்யப்பகிறது.
ஆங்காங்கே குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறுவதால் முழுமையான குடிநீர் வழங்கவில்லை. பேரூராட்சி நிர்வாகம் சார்பில் சரிசெய்யும் பணிகள் நடந்து, நேற்று முதல் குடிநீர் வினியோகம் செய்யபட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் கல்லல் அருகே காவிரி நீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால், திருவாடானை, தொண்டிக்கு 5 நாட்களாக காவரி நீர் நிறுத்தபட்டுள்ளது.
தொழிலாளர்கள் சரி செய்யும் பணியில் ஈடுபட்டிருப்பதால் இன்று (ஆக.26) முதல் குடிநீர் செய்யப்படும் என அதிகாரிகள் கூறினர்.

