/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
திருவெற்றியூரில் குடிநீர் தட்டுப்பாடு
/
திருவெற்றியூரில் குடிநீர் தட்டுப்பாடு
ADDED : செப் 06, 2024 04:50 AM
திருவாடானை: திருவாடானை அருகே திருவெற்றியூர் ஊராட்சியில் திருவெற்றியூர், புதுப்பையூர், கீழகைக்குடி உள்ளிட்ட பல கிராமங்களில் ஒரு மாதமாக குடிநீர் சப்ளை இல்லை. மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கிராம மக்கள் கூறியதாவது: திருவெற்றியூரில் பாகம்பிரியாள் கோயில் உள்ளது. வெள்ளி, செவ்வாய் நாட்களில் பல ஆயிரம் பக்தர்கள் கூடுவார்கள். கூட்டு குடிநீர் திட்டம் செயல்படாததால் காவிரி குடிநீர் சப்ளை செய்யப்பட்டது. தற்போது ஒரு மாதத்திற்கும் மேலாக காவிரி நீரும் சப்ளை இல்லை.
அத்தியாவசிய தேவைகளுக்கு கூட குடிநீர் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். கோயிலுக்கு வரும் பக்தர்களும் சிரமம் அடைகின்றனர். அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.