/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சூரம்புலியில் குடிநீர் தட்டுப்பாடு
/
சூரம்புலியில் குடிநீர் தட்டுப்பாடு
ADDED : பிப் 15, 2025 05:37 AM
ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் யூனியன் கள்ளிக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட சூரம்புலியில் 30க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர்.
இப்பகுதிக்கு இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மட்டுமே காவிரி கூட்டு குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது முற்றிலும் குடிநீர் சப்ளை செய்யப்படாததால் அப்பகுதி மக்கள் சிரமப்படுகின்றனர்.
இதனால் பாதுகாப்பற்ற குடிநீரை குடம் ரூ.12 கொடுத்து வாங்கி பயன்படுத்தும் அவல நிலையில் உள்ளனர். மேலும் சில மாதங்களுக்கு முன்பு அப்பகுதிக்கு உள்ளூர் கூட்டுக் குடிநீர் திட்டத்தில் தண்ணீர் வழங்குவதற்காக பைப் லைன்கள் பதிக்கப்பட்டு காட்சிப் பொருளாக உள்ளது.
இதுவரை குடிநீர் சப்ளை செய்யப்படவில்லை என்பதால் கிராமத்தினர் பாதிப்படைந்துள்ளனர். குடிநீர் சப்ளை செய்யப்படாமல் பைப்லைன் மட்டும் பதித்துவிட்டு அதற்கான தொகையை எடுத்துச் செல்லும் நிலை உள்ளதாக மக்கள் குற்றம் சாட்டினர்.
எனவே மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கிராமத்தினர் வலியுறுத்தி உள்ளனர்.