/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பன்னீர்செல்வம் என்ன சொல்கிறார் என்று எங்களுக்கு ஒன்றும் புரியல ஆர்.பி. உதயகுமார்

ADDED : மார் 25, 2024 06:08 AM
ராமநாதபுரம், : பன்னீர்செல்வம் என்ன சொல்கிறார் என்று எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை. எங்களுக்கு தேர்தல் வேலை இருக்கிறது என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார். அவர் கூறியதாவது:
ராமநாதபுரம் தொகுதியை பன்னீர்செல்வம் ஏன் தேர்ந்தெடுத்தார் என்பது தெரியவில்லை. இங்கு வந்து தான் கட்சியையும், இரட்டை இலையையும் மீட்கப்போவதாக தெரிவித்துள்ளாரே என நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த உதயகுமார், அது என்ன கணக்கு என்று எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை. ஏன் என்றால் அவர் இன்று ஒன்றை சொல்வார், நாளை வேறு ஒன்றை சொல்வார். ஒரு வாரம் கழித்து மற்றொன்றை சொல்வார். அவர் சொல்வதை அவரிடம் தான் கேட்க வேண்டும். அவர் சொல்வது எங்களுக்கு புரியவில்லை. எங்களுக்கு தேர்தல் வேலை இருக்கிறது. 6 சட்டசபை தொகுதிகளுக்கும் செல்ல வேண்டும் என்றார்.