/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஹைவே பேட்ரோல் வாகனங்களில் இணையதள கண்காணிப்பு கேமரா
/
ஹைவே பேட்ரோல் வாகனங்களில் இணையதள கண்காணிப்பு கேமரா
ஹைவே பேட்ரோல் வாகனங்களில் இணையதள கண்காணிப்பு கேமரா
ஹைவே பேட்ரோல் வாகனங்களில் இணையதள கண்காணிப்பு கேமரா
ADDED : செப் 04, 2024 01:00 AM

ராமநாதபுரம் : தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலை போலீஸ் ரோந்து வாகனங்களில்(ஹைவே பேட்ரோல்) இணையதள இணைப்புடன் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
தேசிய நெடுஞ்சாலைகளில் ரோந்து வாகனங்களில் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் தேசி நெடுஞ்சாலையில் நடக்கும் விபத்துக்கள், குற்றங்களை தடுக்கும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தற்போது இந்த வாகனங்களில் இணையதள இணைப்புடன் கூடிய டிஜிட்டல் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
ராமநாதபுரத்தில் கண்காணிப்பு கேமராக்களை இயக்கி வைத்த சந்தீஷ் எஸ்.பி., கூறியதாவது: ராமநாதபுரம் மாவட்டத்தில் நெடுஞ்சாலை ரோந்துப்பணியில் உள்ள மூன்று வாகனங்களுக்கு முதற்கட்டமாக இந்த இணையதள இணைப்புடன் கூடிய டிஜிட்டல் கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
இதனை எஸ்.பி., ஏ.எஸ்.பி., உள்ளிட்ட அதிகாரிகள் அலுவலகத்தில் இருந்தும், கட்டுப்பாட்டு அறையில் இருந்தும் கண்காணிக்க முடியும்.
ரோந்து வாகனம் எங்கு நிறுத்தப்பட்டுள்ளது. பணியில் இருக்கும் அதிகாரிகள், வாகனத்தின் முன்பு என்ன நடக்கிறது உள்ளிட்ட அனைத்தும் இதில் பதிவாகும். இரவு நேரங்களிலும் இதில் தெளிவாக வாகன பதிவெண் உட்பட அனைத்தும் பதிவாகும்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 16 வாகனங்களில் மீதமுள்ள 13 வாகனங்களுக்கும் இணையதள டிஜிட்டல் கேமரா பொருத்தி கண்காணிக்கப்படவுள்ளது என்றார். ராமநாதபுரம் ஏ.எஸ்.பி., சிவராமன் உடனிருந்தார்.