/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வாரந்தோறும் உற்சாகம்; ஆடலாம்.. எழுதலாம்.. வரையலாம் மாணவர்களே; கல்வித்துறையில் கோடை கொண்டாட்டம் ஏற்பாடு

ADDED : மே 07, 2024 11:24 PM

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்ட பள்ளிக் கல்வித்துறை சார்பில் கோடை விடுமுறை நாட்களில் மாணவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் வாரந்தோறும் ஒரு கருப்பொருள் தலைப்பு வழங்கி வரைதல், ஆடல், பாடல், வாசித்தல், நடித்தல் என பல்வேறு திறமைகள் வளர்க்க ஏற்பாடு செய்துள்ளனர்.
தமிழகத்தில் 2023-24ம் ஆண்டு கல்வி ஆண்டிற்கான பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, 2 பொதுத்தேர்வுகள், ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான ஆண்டு இறுதி தேர்வு முடிந்து கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்நாட்களில் மாணவர்கள் வீட்டில் இருந்தபடியே தங்களது திறமையை வளர்த்துக் கொள்ளவும், அவர்களை உற்சாகப்படுத்தவும் ராமநாதபுரம் மாவட்ட பள்ளிக் கல்வித்துறை ''வாரந்தோறும் உற்சாகம்'' என்ற தலைப்பில் முகவை கோடை கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது.
இதில் வாரந்தோறும் ஒவ்வொரு விழிப்புணர்வு தலைப்புகள் வழங்கப்படுகிறது. அக்கருத்தை மையப்படுத்தி மாணவர்கள் ஓவியம் வரையலாம், ஆடல், பாடல், நடித்து காட்டியும் திறமைகளை அவர்களது ஆசிரியர் வழியாக இணையதளத்தில் பதிவு செய்ய ஏற்பாடு செய்துள்ளனர்.
இதுகுறித்து ராமநாதபுரம் முதன்மை கல்வி அலுவலர் (பொறுப்பு) பிரின்ஸ் ஆரோக்கியராஜ் கூறியதாவது: கோடை விடுமுறை காலத்தில் வீட்டில் இருந்தபடியே மாணவர்கள் தங்களது திறமையை வளர்த்துக் கொள்ளும் வகையில் கோடை கொண்டாட்டம் நடத்துகிறோம். இந்த வாரம் (மே 1 முதல் 7 வரை) நெகிலி இல்லாத உலகம் என்ற கருப்பொருள் வழங்கினோம். மாணவர்கள் பலர் காகிதப் பை தயாரித்தும், ஓவியங்கள், களிமண் சிற்பங்கள், பிளாஸ்டிக் இல்லாமல் நாளை கழித்த அனுபவங்களை எழுதுமாறு கூறி இருந்தோம். நிறைய மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். சிறப்பான பங்களிப்பு செய்யும் மாணவர்களுக்கு வரும் கல்வி ஆண்டில் பள்ளி திறப்பின் போது பாராட்டி பரிசு, சான்றிதழ் வழங்க உள்ளோம் என்றார்.