/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பார்த்திபனுாரில் அ.தி.மு.க., வேட்பாளருக்கு வரவேற்பு
/
பார்த்திபனுாரில் அ.தி.மு.க., வேட்பாளருக்கு வரவேற்பு
பார்த்திபனுாரில் அ.தி.மு.க., வேட்பாளருக்கு வரவேற்பு
பார்த்திபனுாரில் அ.தி.மு.க., வேட்பாளருக்கு வரவேற்பு
ADDED : மார் 22, 2024 04:40 AM

பரமக்குடி: ராமநாதபுரம் லோக்சபா அ.தி.மு.க., வேட்பாளருக்கு பார்த்திபனுாரில் வரவேற்பு அளிக்கப்பட்ட நிலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ராமநாதபுரம் லோக்சபா அ.தி.மு.க., வேட்பாளராக ஜெயபெருமாள் அறிவிக்கப்பட்டுள்ளார்.
நேற்று மாலை 4:00 மணிக்கு பரமக்குடி அருகே பார்த்திபனூரில் கட்சியினர் அவருக்கு வரவேற்பு அளித்தனர்.
அப்போது ஏராளமான கார்களில் நிர்வாகிகள், தொண்டர்கள் குவிந்தனர். இதனை அடுத்து நான்கு வழி சாலையில் சுமார் அரை மணி நேரம் வரை போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வேட்பாளர் ஜெயபெருமாள் கமுதி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்திலும் மரியாதை செலுத்தினார். மாவட்ட செயலாளர் முனியசாமி, முன்னாள் அமைச்சர்கள் அன்வர்ராஜா, மணிகண்டன் உடனிருந்தனர்.