ADDED : ஜூன் 10, 2024 11:23 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாயல்குடி : சாயல்குடி அரசு தொடக்கப்பள்ளியில் நேற்று முதல் வகுப்பு மாணவர்களை வரவேற்கும் நிகழ்ச்சி நடந்தது. பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் சரிகா பானு, பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் சத்தியமூர்த்தி, தலைமை ஆசிரியை கீதாரமணி ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
உடன் ஆசிரியைகள் மனோகரி, செல்வி, அர்ச்சனா உள்ளிட்டோர் பங்கேற்றனர். முதல் வகுப்பில் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.