/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஊராட்சிகளில் குப்பை அள்ளுவதற்கு வழங்கிய டிராக்டர்கள் என்ன ஆச்சு..
/
ஊராட்சிகளில் குப்பை அள்ளுவதற்கு வழங்கிய டிராக்டர்கள் என்ன ஆச்சு..
ஊராட்சிகளில் குப்பை அள்ளுவதற்கு வழங்கிய டிராக்டர்கள் என்ன ஆச்சு..
ஊராட்சிகளில் குப்பை அள்ளுவதற்கு வழங்கிய டிராக்டர்கள் என்ன ஆச்சு..
ADDED : மார் 01, 2025 06:09 AM
திருப்புல்லாணி: திருப்புல்லாணி மற்றும் கடலாடி ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட ஊராட்சிகளில் குப்பை குவிந்துள்ள நிலையில் இவற்றை அள்ளுவதற்காக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வழங்கப்பட்ட டிராக்டர்கள் என்ன ஆச்சு என்று மக்கள் கேள்வி எழுப்பினர்.
இங்குள்ள அதிக மக்கள் தொகை கொண்ட ஊராட்சிகளுக்கு குப்பை அள்ளுவதற்காக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு டிராக்டர்கள் வழங்கப்பட்டது. ஊராட்சிகளில் அதிகளவு தேங்கும் குப்பையை உடனுக்குடன் அகற்றவும், சேகரிக்கப்பட்ட குப்பையை உரக்கிடங்கிற்கு எடுத்துச் சென்று மக்கும் குப்பை, மக்கா குப்பை என பிரித்தெடுக்கவும் டிராக்டர்கள் பயன்பட்டது.
கிராம மக்கள் கூறியதாவது: ஊராட்சி தலைவர்களின் பதவிக்காலம் நிறைவடைந்த நிலையில் தனி அலுவலர்கள் மற்றும் ஊராட்சி செயலர்கள் பராமரிப்பில் சம்பந்தப்பட்ட ஊராட்சிகள் செயல்படுகிறது.
இந்நிலையில் பல ஊராட்சிகளில் தெரு ஓரங்களில் குப்பை குவிந்துள்ளதால் அவற்றை அள்ளுவதற்கு அரசால் வழங்கப்பட்ட ரூ. 7 லட்சம் மதிப்பிலான டிராக்டர்கள் முடங்கி உள்ளன.
ஊராட்சி நிர்வாகத்திடம் கேட்டால் டிராக்டருக்கு டீசல் போட வேண்டும். டிரைவர் கிடைக்கவில்லை. இதற்கான நிதிக்கு எங்கே போவது என பதிலை திரும்ப திரும்பக் கூறுகின்றனர். எனவே அரசு நிதி வீணடிப்பை தவிர்க்க டிராக்டர் வைத்துள்ள ஊராட்சிகளில் முறையாக குப்பையை உடனுக்குடன் அகற்ற வேண்டும்.
தனி அலுவலர்கள் முறையாக ஊராட்சிகளை வழிநடத்துவதற்கு ஆவண செய்ய வேண்டும் என்றனர்.