/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கண்ணுக்கெட்டிய துாரம் வரை கழிவு நீர் தான்; பரமக்குடியில் மாசுபடுத்தப்படும் வைகை ஆறு
/
கண்ணுக்கெட்டிய துாரம் வரை கழிவு நீர் தான்; பரமக்குடியில் மாசுபடுத்தப்படும் வைகை ஆறு
கண்ணுக்கெட்டிய துாரம் வரை கழிவு நீர் தான்; பரமக்குடியில் மாசுபடுத்தப்படும் வைகை ஆறு
கண்ணுக்கெட்டிய துாரம் வரை கழிவு நீர் தான்; பரமக்குடியில் மாசுபடுத்தப்படும் வைகை ஆறு
UPDATED : ஏப் 01, 2024 07:27 AM
ADDED : ஏப் 01, 2024 06:09 AM

பரமக்குடி : பரமக்குடியில் வைகை ஆறு முழுவதும் எங்கு பார்த்தாலும் கண்ணுக்கு எட்டிய துாரம் வரை கழிவு நீர் பரவி இருப்பதாலும் புதிது புதிதாக முளைக்கும் விஷ செடிகளால் மக்கள் கலக்கத்தில் உள்ளனர். இதுபற்றி யாரிடம் முறையிடுவோம் என புலம்புகின்றனர்.
பரமக்குடி நகராட்சியில் 1 லட்சத்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். நகராட்சி பகுதியில் வெளியேற்றப்படும் அனைத்து வகை கழிவு நீரும் வைகை ஆறு உள்ளிட்ட நீர் நிலைகளில் நேரடியாக விடப்படுகிறது.
வைகை ஆற்றை பிரதானமாக கொண்டு உருவான பரமக்குடி நகரில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை சுகாதாரமான ஊற்று நீருக்கு பஞ்சம் இன்றி மக்கள் வாழ்ந்தனர்.
தற்போது வைகை ஆற்றில் கழிவு நீரை கட்டுப்படுத்த தவறிய பல்வேறு துறை அதிகாரிகளால் வைகை ஆற்றின் ஊற்று நீர் பாழ்பட்டு சுகாதாரம் கேள்விக்குறியாக உள்ளது.
இந்நிலையில் காட்டுப்பரமக்குடி துவங்கி காக்காதோப்பு வரை எங்கு பார்த்தாலும் கண்ணுக்கெட்டிய துாரம் வரை கழிவு நீர் குட்டைகள் மட்டுமே தெரிகிறது.
வரும் நாட்களில் சித்திரை திருவிழா நடக்க உள்ளது. அப்போது பல ஆயிரம் பக்தர்கள் ஆற்றில் கூட உள்ளனர். ஏற்கனவே ஊற்று நீரால் பலரும் தொற்று நோய்க்கு ஆளாகி வரும் நிலையில் ஆற்றிற்கு இரவு நேரங்களில் செல்லும் மக்களுக்கு அபாயம் உள்ளது.
ஆற்றில் தொடர்ந்து கழிவு நீர் கலப்பதால் சீமைக்கருவேல மரங்கள் ஏற்கனவே ஆக்கிரமித்துள்ள நிலையில் புதிது புதிதாக செடி, கொடிகள் மற்றும் மரங்களும் முளைக்க துவங்கியுள்ளன.
இதனால் ஒட்டுமொத்த பரமக்குடி மக்களும் வைகை ஆற்றின் நிலை கண்டு கலகத்தில் உள்ளனர். ஆகவே இவற்றை சீரமைத்து வைகை ஆற்றை காப்பாற்ற வேண்டிய துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
----

