/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
எங்க வேல இல்லீங்க.. ரோடுகளை சுத்தம் செய்ய நெடுஞ்சாலைத்துறை கடிதம்: வரி வசூலிக்கும் உள்ளாட்சி நிர்வாகம் தான் பொறுப்பு
/
எங்க வேல இல்லீங்க.. ரோடுகளை சுத்தம் செய்ய நெடுஞ்சாலைத்துறை கடிதம்: வரி வசூலிக்கும் உள்ளாட்சி நிர்வாகம் தான் பொறுப்பு
எங்க வேல இல்லீங்க.. ரோடுகளை சுத்தம் செய்ய நெடுஞ்சாலைத்துறை கடிதம்: வரி வசூலிக்கும் உள்ளாட்சி நிர்வாகம் தான் பொறுப்பு
எங்க வேல இல்லீங்க.. ரோடுகளை சுத்தம் செய்ய நெடுஞ்சாலைத்துறை கடிதம்: வரி வசூலிக்கும் உள்ளாட்சி நிர்வாகம் தான் பொறுப்பு
ADDED : செப் 07, 2024 05:19 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் போக்குவரத்து மிகுந்த நெடுஞ்சாலைத்துறை ரோட்டோரத்தில் குவிந்துள்ள மணலை சாலைப்பணியாளர்கள் அகற்ற வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. மக்களிடம் வரி வசூலிக்கும் நகராட்சி, ஊராட்சி நிர்வாகத்தினர் தான் துாய்மைப் பணியில் ஈடுபட்டு அகற்ற வேண்டும் என நெடுஞ்சாலைத்துறையினர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
ராமநாதபுரம் -ராமேஸ்வரம் ரோடு, மதுரை ரோடு, பஸ் ஸ்டாண்ட் ரோடு, அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை ரோடு உள்ளிட்ட போக்குவரத்து மிகுந்த ரோட்டோரங்களில் மண் குவிந்து கிடக்கிறது. இதனால் வேகமாக வரும் வாகன ஓட்டிகளுக்கு விபத்து அபாயம் உள்ளது.
இது தொடர்பான புகாரில் நெடுஞ்சாலைத்துறையின் சாலைப்பணியாளர்கள் ரோட்டோரத்தில் குவிந்துள்ள மண்ணை அள்ளும் பணியில் ஈடுபடுகின்றனர். குவித்து வைக்கப்படும் மண்ணை அகற்றக்கூட சம்பந்தப்பட்ட ஊராட்சி, நகராட்சி நிர்வாகத்தினர் முன் வருவது இல்லை.
இதுகுறித்த நெடுஞ்சாலைத்துறையினர் கூறுகையில், மாவட்டத்தில் ரோடு சேதமடைந்து குண்டும் குழியுமாக இருந்தால் அவ்விடங்களில் 'பேட்ஜ் ஓர்க்' செய்கிறோம். இது போக தடுப்புகள் சேதம், முட்செடிகள் வளர்ந்துள்ளதை அகற்றும் பணியில் ஈடுபடுகிறோம்.
ரோட்டோரத்தில் மண் குவிந்துள்ளதை சம்பந்தப்பட்ட ஊராட்சி, நகராட்சி நிர்வாகத்தினர் துப்புரவுப் பணியாளர்களை பயன்படுத்தி அகற்ற வேண்டும். ஆனால் ராமநாதபுரம் நகராட்சி, பட்டணம்காத்தான், சக்கரகோட்டை ஊராட்சி நிர்வாகத்தினர் பாரமுகமாக உள்ளனர்.
ராமேஸ்வரம், மதுரை ரோட்டில் அடிக்கடி மண் அள்ளும் பணியில் ஈடுபடுவதால் பேட்ஜ் ஓர்க், முட்செடிகளை அகற்றும் பணி பாதிக்கப்படுகிறது.
எனவே மக்களிடம் வரி வசூலிக்கும் நகராட்சி, ஊராட்சி நிர்வாகத்தினர் ரோட்டோரத்தில் விபத்தை ஏற்படுத்தும் வகையில் குவிந்துள்ள மண், குப்பையை அகற்றவும், வாறுகால்களில் குவிந்துள்ள குப்பையை அள்ளவும் முன்வர வேண்டும்.
இதுதொடர்பாக நெடுஞ்சாலைத்துறை சார்பில் நகராட்சி, ஊராட்சி நிர்வாகத்தினருக்கு கடிதம் எழுதியுள்ளோம். ரோடு துாய்மை பணியில் நகராட்சி, ஊராட்சி நிர்வாகத்தினர் ஈடுபட கலெக்டர் சிம்ரன்ஜீத் காலோன் உத்தரவிட வேண்டும் என்றனர்.---