/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
விவசாயிகளுக்கு ஆரம்பத்திலேயே கூட்டுறவு கடன் வழங்கப்படுமா
/
விவசாயிகளுக்கு ஆரம்பத்திலேயே கூட்டுறவு கடன் வழங்கப்படுமா
விவசாயிகளுக்கு ஆரம்பத்திலேயே கூட்டுறவு கடன் வழங்கப்படுமா
விவசாயிகளுக்கு ஆரம்பத்திலேயே கூட்டுறவு கடன் வழங்கப்படுமா
ADDED : ஆக 12, 2024 04:38 AM
சாயல்குடி : கடலாடி, சாயல்குடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல ஆயிரம் ஏக்கரில் நெல், மிளகாய் மற்றும் சிறு, குறு தானியங்கள் சாகுபடி செய்யப்படுகிறது. தற்போது ஆடி மாதம் கோடை உழவு செய்யப்பட்ட நிலத்தில் விவசாயிகள் மழைக்காக காத்திருக்கின்றனர்.
விவசாயப் பணிகளை துவங்குவதற்கு முன் பெரும்பாலான விவசாயிகள் தங்களிடம் பணம் இல்லாத நிலையில் பிறரிடம் கடன் வாங்கி அவற்றைக் கொண்டு விவசாயத்தில் ஈடுபடுகின்றனர்.
எனவே விவசாய ஆரம்ப கட்டத்தில் விவசாயிகளுக்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் மூலம் உரிய நேரத்தில் கடன் தொகை வழங்கினால் பயனுள்ளதாக இருக்கும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. சாயல்குடி அருகே பிள்ளையார்குளத்தைச் சேர்ந்த விவசாயி சத்தியமூர்த்தி கூறியதாவது:
மழையை கணக்கிட்டு ஆவணி மாதத்தில் பெரும்பாலான விவசாயிகள் நெல் விதைப்பில் ஈடுபடுகின்றனர்.
விவசாயத்திற்காக தனியாரிடம் கூடுதல் வட்டிக்கு கடன் வாங்கி விவசாயப் பணிகளில் ஈடுபட வேண்டி உள்ளது. இந்நிலையில் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் டிச., மாதம் இறுதியில் விவசாயிகளுக்கு கடன் தொகை வழங்குகிறது.
இந்நிலையை மாற்றி உழவு செய்வதற்கும், களை எடுப்பதற்கும், உரமிடுதலுக்கும் குறிப்பிட்ட நேரத்தில் கடன் தொகையை பிரித்து வழங்க உரிய நடவடிக்கை எடுத்தால் விவசாயிகளுக்கு கடன் சுமை குறையும். ஏராளமானோர் ஆர்வமுடன் விவசாயத்தில் ஈடுபடுவதற்கு வழிவகுக்கும். இது குறித்து உயர் அதிகாரிகள் பரிசீலனை செய்தால் பயனுள்ளதாக இருக்கும் என்றார்.