/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பரமக்குடியில் பரவலாக மழை; சற்றே தணிந்த வெப்பம்
/
பரமக்குடியில் பரவலாக மழை; சற்றே தணிந்த வெப்பம்
ADDED : ஏப் 12, 2024 10:38 PM

பரமக்குடி : பரமக்குடி பகுதிகளில் நேற்று காலை துவங்கி மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் மழையால் சற்று வெப்பம் தணிந்தது.
பரமக்குடியில் கடந்த 20 நாட்களாக வெயில் வாட்டி வதைக்கிறது. இந்நிலையில் காலை 11:00 முதல் மதியம் 3:00 மணி வரை மக்கள் நடமாட்டம் இன்றி பஜார் பகுதி வெறிச்சோடி காணப்படுகிறது.
இதனால் இளநீர், தர்பூசணி, சர்பத், கரும்புச்சாறு உள்ளிட்டவை அதிகஅளவில் விற்பனை ஆகின்றன. தொடர்ந்து இளநீர் விலை ரூ.70 வரை உயர்ந்துள்ளது.
இச்சூழலில் நேற்று காலை முதல் பரமக்குடி நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் லேசான மேகமூட்டம் காணப்பட்டது.
இதையடுத்து மதியம் 2:00 மணிக்கு பல்வேறு பகுதிகளில் 10 முதல் 20 நிமிடங்கள் வரை மழை நீடித்தது. இதனால் நகரில்குளிர்ச்சியான காற்று வீசியதால் மக்கள் நிம்மதி அடைந்தனர்.

